பெரம்பலூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தணிக்கை குழுவினர், துணை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் 147-பெரம்பலூர் (தனி) மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பட்டியலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தணிக்கை குழுவினர் சஞ்சிவிவ் குமார் பிராசாத் (தேர்தல் பிரிவு அலுவலர்) மற்றும் செயலாளர் (ஓய்வு) லலித்மோகன் ஆகியோர் வாக்கு பதிவு அலுவலரும் சார்ஆட்சியருமான மதுசூதன்ரெட்டி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் தணிக்கை மற்றும் ஆய்வு செய்தனர்.
இக்கூட்டத்தில் அங்கரீக்கப் பட்டகட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியல் தொடர்பாகவும் மற்றும் நடந்து முடிந்த சிறப்பு சுருக்க திருத்த பட்டியல் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடா;பாகவும்; கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதனை தொடர;ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தோ;தல் பிhpவு அலுவலகத்திலும், 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட எசனை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களையும் தணிக்கை குழுவினர் பார்வையிட்டனர்.
வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குபதிவு எந்திரம் வைத்துள்ள சேமிப்பு கிடங்கையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட லப்பைகுடிகாடு பேரூராட்சியல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர், மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலை சிறப்பாக தயாரிப்பது குறித்து அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். அரசு அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.