தேசிய வயிற்றுப்பூச்சி நீக்கும் தினத்தை முன்னிட்டு 1 முதல் 19 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அல்பென்டோசோல் மாத்திரைகள் அனைத்துப்பள்ளிகளிலும் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சியர்
தேசிய வயிற்றுப்பூச்சி நீக்கும் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர; மாவட்டத்திலுள்ள 1 வயது முதல் 19 வயது வரையுள்ள சுமார; 1 லட்சத்து 37 ஆயஜரத்திற்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு வருகின்ற பிப்.10 ம்தேதி அல்பென்டோசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த மாத்திரைகள் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் குழந்தைகளுக்கும் வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மூலமாக வழங்கப்பட உள்ளதை தொடர்ந்து, அதற்கான முன் ஏற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசியதாவது:
குழந்தை பருவத்தில் சத்துள்ள உணவுகள் கிடைப்பதுடன், அவர்களின் உடல் நலத்தை பேணுவதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகளை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 1 வயது முதல் 19 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வயிற்றுப் பூச்சியினை நீக்க மருந்து வழங்கும் முகாம் வரும் 10.2.2016 அன்று நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 1 முதல் 19 வயதுள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு அல்பென்டோசால் எனப்படும் வயிற்றுப்பூச்சி நீக்க மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர;ச்சி துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் இணைந்து சிறப்பாக செயல்படுத்தப்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை பற்றியும், எவ்வாறு குழந்தைகளுக்கு அம்மருந்துகளை கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைள் குறித்தும், சுகாதாரத்தை கடைபிடிக்க செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும் ஆசிரியர்களுக்கு அனைத்து வட்டாரத்திலும் மருத்துவத்துறை அலுவலர்களால் முறையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மருந்துகளை உடகொள்ளும் குழந்தைகளுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் அவர்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான பயிற்சிகள் முழுமையாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் மூலமாக கிராமப்புறங்களிலுள்ள அனைத்து குழைந்தைகளுக்கும் வயிற்று பூச்சி நீக்க மருந்துகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் மாத்திரையின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு திரவ வடிவில் உள்ள மருந்துகளை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
முகாம் நடைபெறும் அன்று அனைத்து பகுதிகளுக்கும் மாத்திரை மற்றும் மருந்துகளைகளை கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வரும் பிப் 10 தேதி நடைபெறும் முகாமில் விடுப்பட்ட குழந்தகளுக்கு பிப்ரவரி 15 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர;கள் தங்களது குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும் , என கூறினார்.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி , இணை இயக்குநர் மருத்துவர் உதயக்குமார், துணை இயக்குநர் சம்பத், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள் அருணா, பிரேமா, பூமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.