ஆதார் அட்டைக்கு புகைப்படம் சிறப்பு முகாமில் ஆயிரத்து 538 பேர் எடுத்து கொண்டனர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தகவல்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி வரும் 31.12.2015 நிறைவடைய உள்ளதால், கடந்த 24 மற்றும் 25.10.15 ஆகிய இரண்டு நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் மௌலானா மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பெரியவர், சிறியவர் என ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்க விட்டுப்போன நபர்களில் ஆயிரத்து 538 நபர்கள் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும், புகைப்படம் எடுக்க விடுபட்டவர்களும் பயன்பெறும் வகையில் 31.12.15 வரையுள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.