பெரம்பலூர்: நகை மதீப்பீட்டளர் பயிற்சி பெற்ற அனைவரையும் அரசு வங்கிகளில் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் நகைக்கடன் பிரிவு செயல் பட்டு வருகிறது.
நகைகளை அடமானமாக வைத்துக் கொண்டு வணிகக் கடன், வேளாண் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இதற்கு அடமானம் பெறும் நகைகளை மதீப்பீடு செய்ய நகை மதீப்பீட்டாளர்களை அவுட் சோர்ஸ் முறையில் வேலைக்கு அமர்த்தி உள்ளன.
இவர்களுக்கு வங்கியும் சம்பளமும் தருவதில்லை, மாறாக நகை அடமானம் வைக்கும் பயனாளியிடம் ஒரு லட்த்திற்கு குறைந்த ரூ: 250 வீதம் வசூலித்து அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மறைமுகமாக வங்கி ஊழியர்களுக்கும் கவனிப்பு உண்டு.
(நாம் கட்டும் பணத்தை கள்ள நோட்டா நல்ல நோட்டா என்பதை சோதிக்க அவர்கள் மிசின் மூலம் பரிசோதித்து வாங்குவார்களாம்,
வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைக்கு மட்டும் தங்கமா, பித்தளையா என்பதை கண்டுபிடிக்க நகை உரிமையாளர்கள் பயன் கொடுக்க வேண்டுமாம்,
இது வங்கி வாடிக்கையாளர்களளை ஏமாற்றும் ஒரு வழி, இதே போல் தனியார் நிதி நிறுவனங்களிலும் டம்மியாக ஒருவரை நியமித்து அவருக்கு வரும் கமிசனில் பங்கு கொடுத்து விடுகின்றனர்.)
நாள் ஒன்றுக்கு ஒரு வங்கியில் 25 லட்சம் வரை கடன் வழங்குகிறார்கள்,
ஒரு நாளைக்கு ஒரு வங்கி நகை மதீப்பீட்டாளரின் வருமானம் ரூ: 250 X 25 = 6,250 ரூபாயை நாள் ஒன்றுக்கு கமிசனாக பெறுகிறார்.
வாரம் ஆறு நாட்களும், மாதத்திற்ற 24 நாட்கள் என வைத்துக் கொண்டால் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 1லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். ஆனால், இதற்கு தொழில் வரி, வருமான வரி கட்டுவதில்லை.
இதற்கு படிப்போ 10 ஆம் வகுப்பே போதுமானது!
ஆனால், இப்பயிற்சியை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிளிலும் நகை மதீப்பீட்டளார் பயிற்சியை பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.
ஆனால், பணிக்கு அமர்த்துவது ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே வைத்துக் கொள்கின்றனர்.
இதை அரசாங்கமே பணமும் பெற்றுக் கொண்டு பயிற்சியும் அளித்துவிட்டு வேலைக்கு மட்டும் ஒரு குறிபிட்ட சாதியிரை மட்டும் வேலைக்கு அமர்த்து எவ்விதத்திலும் நியாமில்லை.
இதை அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கமே சாதிகளை ஆதரிக்கும் போக்கை காட்டுவததாக தெரிகிறது.
அரசு பயிற்சி பெற்ற நியாயமாக அனைத்து சாதியினரையும் நகை மதீப்பீட்டளராக அங்கீரிக்க வேண்டும், இல்லை எனில், அரசு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு இந்த வேலை அந்த சாதிக்கு மட்டும் தான் என அறிவிப்பு செய்ய வேண்டும்,
அதை விடுத்து பணத்தையும் பறித்துக் கொண்டு வேலையை வழங்குவதில்லை என்பது எவ்வித்தில் நியாயம்,
குலத் தொழில் முறையை ஒழித்து அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.