பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் செம்படையான்(வயது50) விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு செம்படையான் வீட்டிற்கு வந்து விட்டார்.
இன்று காலை வழக்கம் சென்று பார்த்த போது 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதையும், 2 ஆடுகள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கால்நடை மருத்துவரைக்கொண்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.