பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையிலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமலும் நோய் தடுப்பு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியினை அன்னமங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா துவக்கி வைத்தார். அன்னமங்கலம், அரசலூர், விசுவகுடி, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று உரல் குழி, டயர் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அகற்றி குளோரின் பவுடர் தெளித்து நோய் தடுப்பு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.