பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கங்கலம் கிராமத்தில் உள்ள எசனை பிரிவு சாலை அருகே முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலின் முன்பகுதியில் நட்டு வைக்கப்பட்டிருந்த வேல் கம்பை பிடுங்கி அதனைப் முன்புற கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உண்டியலை பெயர்த்து எடுக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் உண்டியலில் இருந்த ஆயிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது. மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.