பெரம்பலூர்: முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே . அப்துல்கலாம் மாணவர்களுக்காக வாழ்ந்து சரித்தரம் படைத்தார், அதை உணர்த்தும் வகையில் அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக கொண்டாட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
அதன் பேரில், பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் வேப்பூர் ஒன்றியத்தில் வேப்பூர் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்,மாணவியர்களுக்கு நோட்டு பேனா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடபட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டஅவை தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி,சிவகுமார் , வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் துரை.சிவாஐயப்பன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்சமிதுரை, செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, ரெங்காராஜ் பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி ராஜேந்திரன், மாவட்ட மாணவாரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேகர், சீனிவாசன், சுரேஷ், முருகேசன் வேப்பூர் ஒன்றிய நிர்வாகி கோவிந்தன், குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மகளிரணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .