30-ம் தேதி பள்ளி , கல்லூரி மற்றும் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு.
நாளை இராமேஸ்வரத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கபடுகிறது.
அப்துல் கலாம் இறுதி சடங்கில் பிரதமர் மோடி மற்றும் 6 மாநில முதல்வர்கள் பங்கேற்பு.
ராமேஸ்வரத்திற்கு அவரது உடல் நாளை 12 மணிக்கு மேல் வருகிறது. பொதுமக்கள் நாளை இரவு 8 மணி வரை அஞ்சலி செலுத்தலாம்.நாளை மறுதினம் அடக்கம்.
அ.தி.மு.க நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு ரத்து – ஜெயலலிதா அறிவிப்பு .
வெளிநாட்டு தலைவர்கள் யாரும் வர வில்லை பலநாட்டு தலைவர் இந்தியா தூதரகத்தை தொடர்பு கொண்டு வருவதாகவும் வருவதற்க்கு விருப்பம் தெறிவித்து உள்ளனர் ஆனால் பாதுகாப்பு மற்றும் நேரம் கருதி வரவில்லை என்று தூதரக செய்தி தகவல்.
டெல்லி ராஜாஜி மார்க்கில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு மற்றும் அப்துல் கலாம் படத்திற்க்கு அஞ்சலி செலுத்தப்படும்.தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் தா வெள்ளையன் தகவல்.