இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே..அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இளைஞர் எழுச்சிநாள் பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்: “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “திருக்குறள் வழி நடந்தவர் ” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படுபவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே..அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் நாள் “இளைஞர்; எழுச்சி நாள்” ஆக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இளைஞர் எழுச்சி நாள் பேரணி இன்றுநடைபெற்றது. பாலக்கரையில் துவங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்ட கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனர்.
பாலக்கரையில் துவங்கிய இந்தப்பேரணி கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது.
அதுமட்டுமல்லாது அப்துல்கலாம் அவர;களின் பெருமைகளை, பொன்மொழிகளை, வாழ்க்கையில் அவர; சந்தித்த தடைகளை, சாதித்த உயரங்களையெல்லாம் மாணவ,மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து 139 பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்வு சிறப்பாக நடத்தபட்டது என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.