அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பெரம்பலூரில் அம்பேத்கரின் 59 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் வெள்ளையன் தலைமையில் மாலை அணிவித்து அக்கட்சியினர், மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் கிருஷ்ண அர்ஜுன், ஒன்றிய தலைவர்கள் செல்வம் (பெரம்பலூர்), செந்தில்குமார்(ஆலத்தூர்), கலியன் வேப்பந்தட்டை, ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள்(ஆலத்தூர்), ஆசைத்தம்பி(வேப்பந்தட்டை), நகரத் தலைவர் கனல் கண்ணன் (எ) உமர்,நகர துணைத் தலைவர் முருகபூபதி, இணைச் செயலாளர் சுபான்பாட்சா, நகர துணைச் செயலாளர்கள் கோபி, பிச்சை, சுப்பிரமணியன், புயல் செந்தில், ஆலத்தூர் ஒன்றிய கிளை செயலாளர் ரவி, பெரம்பலூர் ஒன்றிய கிளை அணி துணைச செயலாளர் பிரேம்குமார்உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று , பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், மாநிலச் செயலர் வழக்குரைஞர் பி. காமராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் எல்.ஆர். செல்லசாமி, மாவட்டச் செயலர் தர்மலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் நலக்கூட்டணி சார்பில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்டச் செயலர் க. செந்தில்குமார் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணபிரான், நகரச் செயலர் தேவந்திரன், ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன் தலைமையில், ஆதி திராவிடர் நல மாநில துணை அமைப்பாளர் பா. துரைசாமி முன்னிலையில், சங்குப்பேட்டை பகுதியில் அம்பேத்கரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க மாணவரணி த.கருணாநிதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.