சென்னை : அம்பேத்கார் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை நீக்கியது சென்னை ஐஐடி நிர்வாகம். மாணவர் அமைப்புடன் ஐஐடி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை விமர்சித்து பிரசுரம் வெளியிட்டதால் வாசகர் வட்டத்திற்கு தடைவிதித்தது ஐஐடி. வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் ஐஐடியை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. நடவடிக் கைக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை அடுத்து பணிந்தது ஐஐடி நிர்வாகம்.