பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் குதரத்துல்லா திறந்து வைத்தார். துணைத் தலைவர் சார்லஸ் லூர்துசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் பேசினர். இதில் அங்கன்வாடி மையக் குழந்தைகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.