இது குறித்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடம் 1 (ஒன்று) புதிய இன சுழற்சிமுறை அரசாணைப்படி பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பணிமனை உதவியாளர் பதவிக்கான ஊதிய விகிதம் 5200-20,200+ 1900 (தரஊதியம்) ஆகும்.
பணிமனை உதவியாளர் பணியிடம் அருந்ததியர் ஆதரவற்ற விதவை SC(A) (DESTITUTE WIDOW) இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி கல்வித்தகுதி மின்சார பணியாளர் தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற என்டிசி, என்ஏசி மற்றும் முன் அனுபவ சான்றுகளுடன் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது கல்வித்தகுதி குறித்த விபரத்துடன் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தண்ணீர்பந்தல் (ரோவர் கலைக்கல்லூரி பின்புறம்) பெரம்பலூர்-621220 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை 29.12.15 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அதில் தெரிவித்துள்ளார்.