குன்னம் அருகே சாலையோரப்பள்ளத்தில் அரசுப்பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பெண்கள் உட்பட 25க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூரிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து சடைக்கன்பட்டி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப்பள்ளத்தில்
கவிழ்ந்தது.
பயணிகள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி அலறினர். இதுபற்றி அறிந்து அவ்வழியே வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அரியலூரைச் சேர்ந்த முருகானந்தம்(43),ராமச்சந்திரன்(39), குன்னம் கிராமத்தை சேர்ந்த ராமப்பிள்ளை(60), இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த பானுமதி(40), மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராசம்பாள்(50), ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த குன்னம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அரசுப்பேருந்தை அப்புறப்படுத்தி, விபத்திற்கு காரணமான ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் நடத்துனர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.