பெரம்பலூர்: இன்று மதியம் மேலப்புலியூரில் இருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தை நோக்கி சென்ற அரசுப் பேருந்து சங்குப் பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது முன்னே சென்ற தனியார் பளளிப் பேருந்தின் பின்புறமாக இடித்தது. அரசுப் பேருந்தின் முனபக்க கண்ணாடி மட்டும் உடைந்தது. பள்ளிப் பேருந்தின் பின்பகுதி சற்று சேமடைந்தது.
அதில், அதிர்ஷ்ட்ட வசமாக பள்ளி பேருந்தில் சென்ற மாணவர்களுக்கோ, அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கோ எவ்விதம் காயம் மற்றும் சேதங்கள் ஏற்படவில்லை. இது குறித்து பெரம்பலூர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்து பேருந்துகளை அப்புறப்படுத்தினர்.