பெரம்பலூரில் இன்று நடைபெற்ற விபத்துக்கு விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு கலெக்டர் நோட்டீஸ் விடுத்துள்ளார்.
பெரம்பலூரில் இன்று தனியார் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் 37 மாணவிகள் காயமடைந்ததாகவும், அவர்களில் 35 பேர் புற நோயளிகளாக சிகிச்சை பெற்ற அவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த மாணவன், மாணவி உள்நோயாளி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படுத்திய வாகனம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகன ஓட்டுநர் ராஜாளி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும் அரசு தரப்பில் கலெக்டர் பத்திரிக்கை செய்தி கொடுத்துள்ளார்.
ஆனால், கடந்த மே.23 தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 312 பள்ளிகளில் 227 வாகனங்களில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை முழுமையாக பின்பற்றவில்லை என 13 வாகனங்கள் கண்டறியப்பட்டதாக தகுதி சான்று தற்காலிகமாக தடை விதித்தனர்.
விபத்துக்குள்ளான தனியார் கல்வி நிறுவனத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் பொறுப்பாளியாக்கமல், மே. 23 அன்று வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகளையும், இதில் பொறுப்பாளிகளாக சேர்க்க வேண்டும்.
ஏனெனில் இவர்களின் கவனக் குறைவான வாகன தனிக்கையே இன்றைய விபத்திற்கு காரணம். வாகன தணிக்கை செய்து 2 மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.