பள்ளி மாணவர்களுக்கான குறு வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப்போட்டி பெரம்பலூர் மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைப்பெற்று வருகின்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது.
பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களுக்கான குறு வட்டார அளவிலானப் போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
ஆலத்தூர்-வேப்பூர் ஒன்றியங்களுக்கான குறு வட்டார அளவிலானப்போட்டி ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைப்பெற்று வருகின்றது.
இதில் 11,14,17,19-ஆகிய வயதுகள் அடிப்படையில்நான்கு பிரிவுகளாக நடக்கும் இந்த போட்டி ஐந்து சுற்றுகளாக நடத்தப்படுகின்றது.
இதில் வெற்றிப்பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கயுள்ளனர்.