பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே அரசு மருத்துவ மனையில், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தாக இளைஞரை ஒருவரை அரும்பாவூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள மும்முடி பகுதியை சேர்ந்த மருத்துவர் பாரதிப்ரியா (29). இவர், கிருஷ்ணாபுரம் அரசு வட்டார மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் பாரதிப்ரியாவிடம், வெங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஷ் (24) தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாரதிப்ரியா கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்து விசாரிக்கிறார்