பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் சிறுவயலூர் ஊராட்சியில் உள்ள அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் பணியாற்றிட பணி ஓய்வு பெற்ற ஒன்றிய மேற்பார்வையாளர் அல்லது உதவி பொறியாளர் நிலைக்கு தகுதி குறையாத ஒருவரை கிட்டங்கி பொறுகப்பாளராகவுமட், ஓய்வு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் நிலையில் உதவியாளராகவும், நியமனம் செய்யப்பட உள்ளதால் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கி பொறுப்பாளருக்கு ரூ.15ஆயிரமும், உதவியாளர் பணிக்கு ரூ.4 ஆயிரமும் தொகுப்பூதியமாக வழங்கப்படுவதாக த அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி தற்காலிக மானது என்றும், விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் டிச.4ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர், பெரம்பலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப கோரப்பட்டுள்ளது.