பெரம்பலூர்: தீபாவளியை முன்னிட்டு, பால்வினை நோயால் பாதிப்புக்குள்ளாகி பெற்றோரை இழந்த 265 குழந்தைகளுக்கு பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் 265 ஜோடி ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், இனிப்பு, காரம், வழங்கப்பட்டது. அங்கு 500 பேருக்கு விருந்தும் அளிக்கப்ட்டது.
இதில், அரிமா சாசனத் தலைவர் மு.இராஜாராம், ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை, அஸ்வின் ஸவீட்ஸ் கணேசன், வரகுபாடி கணேசன் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்