வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூரில் டூவீலர் மீது டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள வெட்டுவால்மேடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கையா மகன் பெரியசாமி(70), விவசாயியான இவர் நேற்று இரவு அரும்பாவூரில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவ்வழியே வந்த டிராக்டர் முதியவர் பெரியசாமி ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி துடிதுடித்து இறந்தார்.
இதனையறிடிந்த டிராக்டர் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் பெரியசாமியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.