பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று , சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அரும்பாவூரில் சென்று கொண்டிருந்த போது, மின் கம்பத்தில் இருந்த மின்கம்பியில் மோதியது. மினி லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளில் தீ உண்டாகி பற்றி எரியத் துவங்கியது.
வைக்கோல் கட்டுகள் தீ பற்றி எரிவதை அறிந்த லாரி டிரைவர் தமிழ்மணி(27), லாரியை விட்டு இறங்கி தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால், தீ லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் அனைத்திலும் பரவி லாரியும் தீப்பற்றி எரியத் துவங்கியது. அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது.
இதுகுறித்து, பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப்டுத்தினர். தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
லாரியும், வைக்கோல் கட்டுகளும் முற்றிலும் எரிந்து வீணானது.
இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.