பெரம்பலூர் : அரும்பாவூர் அருகே நேற்று இரவு தனியார் பள்ளியில் கான்கிரீட் மேற் கூரை சரிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் அருகே வெங்கலம், தொண்டமாந்துறை பிரிவு சாலையில் உள்ள அன்னை மெட்ரிக் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கான்கிரிட் மேற்கூரை அமைக்கும் பணி நேற்று நடைப்பெற்றது. பணி நிறைவடைந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரிட் கூரை போதிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டதால் திடீரென சரிந்து விழுந்தது.
அப்போது இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த பட்டிருந்த தொழிலாளர்கள் இடிந்து விழுந்த கட்டிட இடுபாடுகளுக்கிடையே சிக்கினர்.
இதில் சம்பவ இடத்திலையே சேலம் மாவட்டம், லத்துவாடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ப்ரியா (21) மற்றும் காந்திமதி(48), கணேசன் என்ற மூவரும் பேர் உயிரிழந்தனர்.
கணேசன் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சோந்தவர். அவர் பள்ளியில் குடும்பத்துடன் தங்கி எலக்ட்ரியசனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணயில் ஈடுப்பட்டனர்.
அதே கிராமத்தை சேர்ந்த சந்திரா மற்றும் சித்ரா ஆகியோர்கள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் சேர்க்கபட்டனர்.
இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பள்ளி தாளாளர் தங்கவேல் , கட்டிட ஒப்பந்தாரர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.