பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (32) விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மண்எண்ணெய் ஸ்டவ் பழுது ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த நிலையில் ராஜரத்தினம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த ராஜரத்தினத்திற்கு காஞ்சனாதேவி ( 28 ) என்ற மனைவியும், பகலவன் (5) என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் தொடா;பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.