பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் நடந்தது. காவல் நிலையம் மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும் பொருட்டு இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொது மக்கள் 6 பேர் புகார் மனுக் கொடுத்தனர். இதில் ஒரு மனு மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 5 மனுகள் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.