பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 262 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும், 256 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 109 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும், 80 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் என மொத்தம் 371 விலையில்லா மடிக்கணினிகளையும், 336 விலையில்லா மிதிவண்டிகளையும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஐலபதி, வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயலட்சுமிகனகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், அரும்பாவூர் பேரூராட்சித் தலைவர் சோலை.இராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.