20151126_110921
பெரம்பலூர்: அருவியில் குளிக்க சென்றவர், செல்பி எடுக்க முயற்சித்த போது தவறி விழுந்தவரை தனிப்படையினர் 2 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்டனர். ஆபத்தான அப்பகுதியை தடைசெய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடாச்சி மழையின் ஒரு பகுதியான பச்சமலை உள்ளது. அம்மாபாயைம் அருகே உள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு வடமேல் பகுதியில் உள்ளது ஆனைக்கட்டி அருவி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.

இந்த அருவியில் குளிப்பதற்காக அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் காலை குளிக்கச் சென்றனர்.

ஆணைக்கட்டி அருவி அருகே 3 அருவிகள் அருகருகே உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சக்களத்தி பாறை அருகே அருவியிலிருந்து அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சங்கர்கணேஷ் (25), (பொறியியல் பட்டதாரி) செல்போனில் செல்பி எடுக்கும் போது வியூவிற்காக பாறையின் பின்புறம் சற்று நகர்ந்த போது பாறையின் மீது படர்ந்திரந்த பாசி சங்கர்கணேசின் காலை வழுக்கி விட்டது. தவறி விழுந்த சங்கர்கணேசன் அருவியின் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையறிந்த அவரது நண்பர்கள், வெகுநேரம் தேடியும் கிடைக்காததால் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் தி.மதியழகன் தலைமையிலான 10 தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அருவி மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் பகல் முழுவதும் தேடினர், கிடைக்கவில்லை என்பதுடன் இரவு நேரமாகிவிட்டதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் இளைஞரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இளைஞரை மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். அங்குள்ள மலைவாழ்மக்கள், வனத் துறையினருடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அருவியின் கீழ் உள்ள 200 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் பாறை இடுக்கு, பள்ளதாக்கு பகுதிகள் மற்றும் மரக்கிளைகளில் எங்காவது சிக்கிக்கொண்டுள்ளாரா என தீவிர தேடுதல் வேட்டையை இரவு 7.30 மணி வரைநடத்தினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் தேடுதல் பணியை கைவிட்டுவிட்டு ஊர் திரும்பினர்.
தவறி விழுந்த சங்கர் உயிருடன் எங்காவது சிக்கி கொண்டு உள்ளரா அல்லது மலைப்பாம்பு , கரடி போனற விலங்குகளிடம் சிக்கி இறந்து விட்டாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது நேற்றிரவு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து 4 படைகள் அமைத்து காணமல் போனவரை தேடும் பணியை முடுக்கி விட்டார். மேலும், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டார்.

காணமல் போன வாலிபர் சங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மிக விரைவில் அவரை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 2 தனிப்படையினர் 200 அடி பள்ளத்தாக்கின் மேல் பகுதியிலும், பள்ளத்தாக்கின் கீழ்பகுதியில் 2 தனிப்டையினர் தேடி வந்தனர். அப்போது சங்கர்கணேசின் உடல் தண்ணீர் மிதந்து வந்தது. உடலை மீட்ட மீட்புப் படையினர் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளார். இது குறித்து பெரம்பலூர், திருச்சி மாவட்ட போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்பி எடுக்க நினைத்து இளைஞர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!