பெரம்பலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடாச்சி மழையின் ஒரு பகுதியான பச்சமலை உள்ளது. அம்மாபாயைம் அருகே உள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு வடமேல் பகுதியில் உள்ளது ஆனைக்கட்டி அருவி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.
இந்த அருவியில் குளிப்பதற்காக அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை குளிக்கச் சென்றனர்.
ஆணைக்கட்டி அருவி அருகே 3 அருவிகள் அருகருகே உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சக்களத்தி பாறை அருகே அருவியிலிருந்து அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சங்கர் (25), (பொறியியல் பட்டதாரி) செல்போனில் செல்பி எடுக்கும் போது வியூவிற்காக பாறையின் பின்புறம் சற்று நகர்ந்த போது பாறையின் மீது பாசி காலை வழுக்கி விட்டது. தவறி விழுந்த சங்கர் அங்குள்ள 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதையறிந்த அவரது நண்பர்கள், வெகுநேரம் தேடியும் கிடைக்காததால் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் தி.மதியழகன் தலைமையிலான 10 தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அருவி மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் முழுவதும் தேடினர், கிடைக்கவில்லை என்பதுடன் இரவு நேரமாகிவிட்டதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் இளைஞரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் இளைஞரை மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். அங்குள்ள மலைவாழ்மக்கள், வனத்துறையினருடன் இன்றும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
200 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் பாறை இடுக்கு, பள்ளதாக்கு பகுதிகள் மற்றும் மரக்கிளைகளில் எங்காவது சிக்கிக்கொண்டுள்ளாரா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனாலும் இன்று இரவு 7.30 வரை தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் தேடுதல் பணியை கைவிட்டுவிட்டனர். தவறி விழுந்த சங்கர் உயிருடன் எங்காவது சிக்கி கொண்டு உள்ளரா அல்லது மலைப்பாம்பு , கரடி போனற விலங்கு களிடம் சிக்கி இறந்து விட்டாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
செல்பியால் வாலிபரின் நிலைமை?…!