பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.32 கோடியே 25 லட்சத்தை உடனே வழங்கக் கோரி, வரும் ஆக. 31ம் தேதி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொதுத்துறை சர்க்கரை ஆலையான எறையூர் சர்க்கரை ஆலைக்கு 2014-15 ஆண்டிற்கான கரும்புக்கான அரவைத் தொகை ரூ.32 கோடியே 25 லட்சம் நிலுவையில் உள்ளது. நடப்பாண்டிற்கான கரும்பு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
விவசாயிகளின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் (பொதுத்துறை) இந்த ஆண்டிற்கு 13 ஆயிரம் விவசாயிகள் அரவைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தெரிவத்தாவது:
2014-15 ஆண்டிற்கான கரும்பு அரவைத் நிலுவைத் தொகை ரூ.32 கோடியே 25 லட்சம் இதுவரை வழங்காத நிலையில் நடப்பாண்டிற்கான அறவைத் தொகை குறித்து விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்பட்டுள்ளதாகவும்,
எனவே, நிலுவைத் தொகையுடன், இந்த நடப்பாணடிற்கான அரவைத் தொகை ரூ.35 கோடி ஒதுக்க வேண்டும் எனவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை வெளி மாவட்ட ஆலைகளுக்கு மூலமாக அறவைக்கு அனுப்பட்ட கரும்பின் நிலுவைத் தொகையையும் உடனடியாக பெற்றுத் தர வேண்டும்.
ஆலையின் இணை மின் உற்பத்தி மற்றும் நவீனப்படுத்துவதற்கான திடடத்தை விரைந்து செயல்படுத்துக் கோரியும், மத்திய அரசு அறிவித்துள்ள வட்டியில்லா கடன் தொகையை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் வருகின்ற ஆக.31 ம் தேதி அன்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை எறையூரில், அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் , பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.