பெரம்பலூர் : பெரம்பலூரில் அஸ்வின்ஸ் நிறுவன ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் ரெங்கராஜ், செல்வகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக இயக்குனர் கணேசன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை டாக்டர்கள் ஆக்னஸ்சில்வியா, வசந்தி ஆகியோர் பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் பொது மேலாளர் அசோக், மனித வள மேம்பாட்டு அலுவலர் கிரிஜா, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் திவ்யா, மேலாளர் ராஜசேகர், கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.