பெரம்பலூர் : அ.தி.மு.கவின் 44-வது துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலர் ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அ.தி.மு.கவின் 44-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டச் செயலர் ஆர்.டி. இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், சட்ட மன்ற முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம், முன்னாள் மாவட்டச் செயலர் மா. ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. சகுந்தலா, துணைத் தலைவர் என். சேகர், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர்கள் து. ஜெயக்குமார், என். கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலர்கள் (ஆலத்தூர்) என்.கே.கர்ணன், வேப்பூர் பா. கிருஷ்ணசாமி, வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், மாநில மீனவரணி இணை செயலர் பி. தேவராஜன், மாவட்ட பொருளாளர் பூவை த. செழியன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலர் எம்.என். ராஜாராம், குரும்பலூர் செயலர் செல்வராஜ், பாடாலூர் ஊராட்சித் தலைவர் ஆர். வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.