சென்னை: அ.தி.மு.க., பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
அதன்படி பெரம்பலுார் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் துரை, மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் கெளரி, சிதம்பரம் எம்.பி., சந்திரகாசி, மாவட்ட பொருளாளர் பூவைசெழியன்,
அரியலுார் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கண்ணகி, மாவட்ட துணை செயலாளர்கள் வாசுகி, தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய செயலாளர்களாக எம்.பி., மருதராஜா (பெரம்பலுார்) சுரேஷ் (செந்துறை), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்துார்), செல்வராசு (அரியலுார்), குமரவேல் (திருமானுார்), வரதராஜன் (தா.பழூர்), கல்யாணசுந்தரம் (ஜெயங்கொண்டம்), சிங்காரம் (ஆண்டிமடம்), நகர செயலாளராக கண்ணன் (அரியலுார்), செல்வராஜ் (ஜெயங்கொண்டம்), பேரூர் செயலாளர்களாக செல்வராசு (குரும்பலுார்), ரெங்கராஜ் (அரும்பாவூர்), வினோத் (பூலாம்பாடி), முகமதுபாரூக் (லப்பைக்குடிக்காடு), லாரன்ஸ் (வரதராஜன்பேட்டை), பெருமாள் (உடையார்பாளையம்) ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமி்க்கப்பட்டுள்ளனர்.