பெரம்பலூர்: அ.மேட்டூர் கிராமத்தில் தேர் திருவிழா நடத்த உரிய பாதுகாப்பு கேட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இரு சமூக மக்களும் சேர்ந்து கடந்த 12.08.2012 அன்று மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாசியர் , அரும்பாவூர் கிராம மக்கள் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்படுததப்பட்ட ஒப்பந்தத்தில் கூறியபடி நடந்து கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.
அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஆதிதிராவிட மக்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
மூப்பனார் கோவில் அருகில் தேர் வந்தவுடன் தெற்குமுகமாக தேர் நின்றவுடன் வழக்கப்படி குடிமக்கள் வழிபாடு முடிந்த உடன் ஆதிதிராவிட மக்களும் சிறப்பு செய்து மாரியம்மனுக்கு செலுத்தவும், அவர்களுக்கு கோவில் பூசாரி திருநீர் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் எவ்வித சட்ட ஓழுங்கும் பிரச்சனையும் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்துவது என்றும் தீர்மானிக்கபட்டதாக தெரிவிக்கின்றனர்.
அதுப்படி நடந்து கொள்வதால் கோவில் திருவிழாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு வந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.