பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டு மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் கருப்பன் (71) விவசாயி. இவர் அப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும்
வருவாய்த்துறை மூலம் எந்த முன் அறிவிப்பின்றி வேப்பந்தட்டை வட்டாட்சியர் தலைமையில் வீட்டை இடித்து விட்டதாக, அதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வேப்பந்தட்டை வட்டாட்சியரை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சுபா.தங்கராசு தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, வி.தொ.ச.மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாதர் சங்கம் எ.கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்கம் எ.கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்து வீடு இடித்ததற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து வட்டாச்சியரிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:
மேற்படி நபர், அரசுக்கு சொந்தமான தார் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளார் என பொதுமக்களிடம் வந்த புகாரின் பேரிலேயே இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருடைய வீடு இது வரை இடிக்கப்படவில்லை. அவருக்கு முறையாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் நேரம் என கேட்டுக் கொண்டதன் பேரில் அவகாசம் அளிக்கப்பட்டது. அவரே ஆஸ்பெட்டாஸ் சீட்களை கழற்றி வைத்துள்ளார். மேலும் ஊருக்குள் அவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.