பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக்கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய விலைக்கடைகளின் பதிவேட்டுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
அரசு ஆணை (நிலை) எண் 143 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு(எப்1)துறை நாள்: 06.10.2010-ன்படி பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக்கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில்,
நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினையும் சமூக தணிக்கைக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் கணக்குகளை 15.08.2015 அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும் என்றும்,
பொதுமக்கள் 15.08.2015 அன்று கிராமசபை கூட்டத்தில் நியாய விலை கடைகளின் சமூகத்தணிக்கையில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது,வடுத்துள்ள செய்திக்க குறிப்பில் தெரிவித்துள்ளார்.