பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 7 பேருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2015-16ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு பெரம்பலூர் ஆர்.சி. பாத்திமா தொடக்கப்பள்ளியில் நேற்று துவங்கியது.
இதில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றித்துக்குள்ளான பொதுமாறுதல்களுக்கான கலந்தாய்வும், 3, நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் 3 , பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள்ளான பொது மாறுதலுக்கான கலந்தாய்வும் 1 , பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடந்தது.
இதில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நாளை17ம்தேதி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றித்துக்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவலுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.