பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாய மாவட்டமான பெரம்பலூரில் இன்று மாலை சுமார் 8.10 மணியளவில் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது.
சற்று லேசான குளிர்ந்த இதமான காற்றும் வீசுகிறது. வெப்பம் குளிர துவங்கி உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப அடுத்து வரும் நாட்களில் விவசாயிகள் விதைப்பை துவங்கும் வாய்ப்பும் உள்ளது.