பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இன்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள பல்வேறு ஊர்களில் நடந்த முகாம்களில் ஆர்வம் காட்டினர். ஆனால், அனைவருக்கும் விண்ணப்பங்களை விலையில்லாமல் வழங்க முடியவில்லை… மேலும், விண்ணபத்தின் நகல்களை வைத்திருந்தவர்கள் பொதுமக்களிடம் விலைக்கு ரூ.10க்கும், எழுது கட்டணமாக ரூ.10 வசூலித்து கொண்டனர். அதனால், இலவசமாக எடுக்கலாம் என வந்த ரூ.20 செலவு செய்து புகைப்படம் எடுக்கும் நிலைக்கு ஆளானார்கள்.