பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி டிசம்பர் மாதம் 31.12.2015 நிறைவடைவதால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நிரந்தர முகாம்களிலும் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களிலும் வரும் 12.12.2015 மற்றும் 13.12.2015 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் மூலம் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 746 நபர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 84 சதவீதம் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
2015 ஆகஸ்ட் மாதத்திற்கு முன் ஆதார் அடையாள அட்டை எடுக்கப்பட்டவர்களில் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதார் அடையாள அட்டை எடுக்கும் மையத்தினை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகளுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் என்பவரை 8012543237 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.