இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் இதுவரை எடுத்திராத நபர்களுக்காக 07.11.2015, 08.11.2015 மற்றும் 09.11.2015 ஆகிய மூன்று தினங்களுக்கு அந்தந்த பகுதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் இதுவரை ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுத்திராத நபர்களுக்கு புகைப்படம் எடுத்திடவும், புகைப்படம் எடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அட்டை கிடைக்கப்பெறாத நபர்களுக்கு அட்டை குறித்த விவரம் வழங்கிடவும் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் (பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தவிர) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் பகுதி வருவாய் ஆய்வாளருக்குட்பட்ட கிராமத்தினைச் சார்ந்தவர்களுக்கு நகராட்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிறப்பு முகாம் மையங்கள் தவிர, குன்னம், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் நிரந்தர ஆதார் புகைப்படம் மையத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு ஆதார் அடையாள அட்டை திட்ட பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வர் 99945-54434, மேற்பார்வையாளர் ஜான் 80125-43237 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.