பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார்அட்டை எடுக்கும் பணி 31.12.2015 நிறைவடைவதால்; பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் முகமில், வருகின்ற அனைத்து சனி மற்றம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆதார் அடையாள அட்டை எடுக்கப்படுகிறது.
மேலும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 24.10.2015 சனி மற்றும் 25.10.2015 சிறப்பு முகாம் மௌலான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த அரியவாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துக் கொள்கிறார்.