மனிதநேய வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற 190 மாணவ,மாணவகளுக்கு சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் மனித நேய வார நிறைவு விழா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பேசியதாவது:
பூமியில் உள்ள உயிரினங்களில் முற்றிலும் வித்தியாசமானதும், மற்ற உயிரினங்களைக்காட்டிலும் சிறப்பம்சங்களை உடையதுமானது மனிதர்கள்தான். ஆனால் நமக்குள் உள்ள சிறப்புகளை மறந்துவிட்டு, பொறாமை உணர்வுகளை வளர்த்துக் கொள்வதில்தான் பலரின் எண்ணம் இருக்கிறது. இவற்றையெல்லாம் மறந்து, நமக்குள் வேற்றுமை இல்லாத வகையில், நாம் அனைவரும் மனிதர;கள் என்ற ஒற்றை எண்ணத்தில் ஒருவருக் ஒருவர் அன்புடன், மனித நேயத்துடன் பழகிக்கொள்ள வேண்டும்.
சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் சகோதரத்துடன், நட்புணர்வுடனும் பழக வேண்டும் என்று இன்று வந்திருக்கும் அனைவரும் உறுதியேற்று அதன்படி வாழ்வதே இன்றைய நிகழ்ச்சியின் வெற்றியாகும். இவ்வாறு பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
அடக்கப்பட்டு, ஒடுக்கபட்டு வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சமுதாய இடர்பாடுகளைக் கடந்து, துயர்களைக் களைந்து சட்ட மேதையாகி எதிர்காலத்தின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றும் அளவிற்கு உயர்ந்தவர் பாபாசாகேப் அம்பேத்கர், அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் ஆதி திராவிட மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒரு ஆண்டிற்கு 1லட்சம் கோடி நிதிஒதுக்கியவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமல்ல மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகப்பை, காலணி, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விலையில்லா நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றியவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள். மாணவச் செல்வங்கள் அனைவரும் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் உயர்ந்தவர்களாக வளர வேண்டும். என இவ்வாறு பேசினார்.
பின்னர் மனிதநேய வார விழாவை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 190 நபர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள்ஈ பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.