ஆன்ட்ராய்ட் மொபைலில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றால் ஒரு ஸ்வாரஸ்ய கேம் விளையாட முடியும்.
ஆனால் நம்மில் பலருக்கு அந்த ரகசிய கேம் பற்றி தெரிவதில்லை.
பொதுவாக கூகுள் க்ரோமை கிளிக் செய்தவுடன், இண்டர்னெட் இணைப்பு இல்லை என்றால் ’இண்டர்னெட் கனெக்ட் செய்ய இயலவில்லை’என ஒரு தகவல் தோன்றும்.
அந்த தகவலுடன் சேர்ந்து ஒரு டைனோஸர் தோன்றும். அந்த டைனோஸர் தான் ரகசிய கேமின் ஹீரோ.
அந்த கேமை விளையாட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும் :
இந்த கேம் விளையாட, ஆன்ட்ராய்ட் மொபைலில் இண்டெர்நெட் இணைப்பு இருக்க கூடாது, ஒரு வேளை இருந்தால் மொபைலில் வைஃபை சேவையை துண்டித்து விட்டு ஏர்பிளேன் மோடில் (Airplane Mode) வைத்துக் கொள்ளவும்,
கூகுள் க்ரோமை கிளிக் செய்யவும். இண்டர்னெட் கனெக்ட் செய்ய முடியவில்லை என தகவல் தோன்றும். அதனுடன் ஒரு குட்டி டைனோசர் உருவம் தோன்றும்.
மொபைல் ஸ்கிரீன் அல்லது ஸ்பேஸ் பாரை தட்டினால், அந்த குட்டி டைனோசர் உயிர் பெற்று ஓட ஆரம்பிக்கும்.
குட்டி டைனோசர் ஒடும் பொழுது, அந்த பாதையில் தோன்றும் தடைகளை தாண்டி செல்வதே விளையாட்டின் ஸ்வாரஸ்யம்.
ஆன்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களுக்கே இந்த விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும் வாய்ப்புக்கள் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.