பெரம்பலூர் : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ( எல்.ஐ.சி ) 59 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ஒவ்வொரு கிளையிலும் ஆயுள் காப்பீட்டு வாரவிழா கொண்டாடப்படுகிறது.
பெரம்பலூர் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் ஆயுள் காப்பீட்டு வாரவிழாவை மாவட்ட போலீஸ் சூப்பிரடண்டு சோனல் சந்திரா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கிளை மேலாளர் வீரமணி வரவேற்று பேசினார். அரிமா சங்க சாசனத்தலைவர் ராஜாராம் வாழ்த்தி பேசினார்.
விழாவில் எல்.ஐ.சி அலுவலக பணியாளர்கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.