பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான நடைபெற்ற தேர்வு கூடங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுசூதன் ரெட்டி பெரம்பலூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரோவர் மேல்நிலைப்பள்ளி, தோமினிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடங்களை பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (31.5.2015) நடைபெற்ற ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் 21 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 400 தேர்வுகூடங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்காக 8 மேற்பார்வையாளர்கள், 26 முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 துறை அலுவலர்கள், 400 அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை பிரிவில் 35 அலுவலர்களும், உதவியாளர் பணிக்கு 15 நபர்களும் வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் பெறுதல் பணிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் கூடிய வாகனங்களில் பணி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 7,976 தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டது. ஆனால் 6,773 நபர்கள் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். 1203 பேர் தேர்வு எழுத வரவில்லை