பெரம்பலூரில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட
பகுத்தறிவாளர் கழக தலைவர் தங்கபிரகாசனார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட நிர்வாகி முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை
வாய்ப்பில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும்.
என்று மண்டல ஆணையம் பரிந்துரை செய்து பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அமல்படுத்தாதை கண்டித்தும், மத்திய அரசு இடத ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் திராவிடர் கழக மாவட்ட,ஒன்றிய, நகர கழக பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கண்டு கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக நகரச்செயலாளர் தங்கராசு வரவேற்றார். முடிவில் திராவிடர் கழக
இளைஞர் அணி நிர்வாகி சின்னதுரை நன்றி கூறினார்