படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த புதிய உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தின் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அருகில் மாநில துணை தலைவர் சுப்ரமணியன், முன்னாள் மாநில செயலாளர் பாலாஜிசிவராஜ், மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர்
இந்தியாவிலேயே மதுவிலக்கை அமுல்படுத்திய ஒரே மாநிலம் குஜராத் மாநிலம் தான். தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது என பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெரம்பலூரில் பேசினார்.
பெரம்பலூரில் புதிய உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தின் பயிற்சி பட்டறை இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் தனபால், பாலவெங்கடேசன், சீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி
வைத்து, கட்சியின் கொள்ளை, கோட்பாடு, செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மாநில துணை தலைவர் சுப்ரமணியம், முன்னாள் மாநில தலைவர் பாலாஜிசிவராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் திருமாவளவன் உட்பட பலர் பேசினர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியில் மிஸ்டு கால் மூலம் புதிய உறுப்பினர்களாக 40 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அகில இந்திய தலைவர் அமித்ஷாவின் அபியான் திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களை நேரில் சந்திப்பு நிகழ்ச்சி மாநில முழுவதும் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் கொள்ளை, கோட்பாடு, செயல்பாடு குறித்து பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டு வருகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலனில் அக்கரை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே மதுவிலக்கை அமுல்படுத்திய ஒரே மாநிலம் குஜராத் மாநிலம் தான். தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்திய தமிழக மக்களை சீரழித்த கருணாநிதியே தற்போது தமிழக இளைய சமுதாயம் சீரழிந்தது போதும் என்ற சிந்தனை ஏற்பட்டு மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்கிறார்.
மதுவால் தமிழினம் அழிந்து வருகிறது. தமிழக பெண்கள் தாலி பாக்கியம் காப்பற்றவேண்டும் எனவே தமிழகத்தில் விரைவில் அதாவது சட்டசபை தேர்தலுக்கு முன்பே மதுவிலக்கை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை தொடர்ந்து படிப்படியே அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். இவ்வாறு மதுவிலக்கை அமுல்படுத்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். முடிவில் நகர தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.