பெரம்பலூர்: பூடானில் கடந்த டிசம்பர் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் கிராமப்புற கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பூடான், நேபாளம், மியான்மார் மற்றும் இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் பங்குப் பெற்றன.
இப்போட்டியில் இந்திய அணியில் பெரம்பலூரை சேர்ந்த முகிலன் என்பவரது தலைமையில் பங்கு கொண்டது. இப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் பூடானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகைச்சூடியது.
அதனை தொடர்ந்து இந்தியா அணித் தலைவர் முகிலன் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமதுவை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
இப்போட்டிகளில் வெற்றிப்பெற்றதை தொடரந்து இந்திய அணி வருகின்ற பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற உள்ள தெற்காசிய கிராமப்புற கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இப்போட்டிகளில் இந்தியா, பங்களாதேஷ், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்குபெற உள்ளது.
கிராமப்புற கிரிக்கெட் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற இந்திய கிராமப்புற கிரிக்கெட் அணியின் கேப்டன் திரு.முகிலனை வாழத்தி, பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள், வருகின்ற பிப்ரவரி; மாதம் பங்களாதேஷில் நடைபெற உள்ள போட்டிகளிலும் வெற்றிப்பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். அப்போது பாடாலூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் உடனிருந்தார்.