பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

20-09-2015 முதல் 24-09-2015 வரை இந்திய விமானப்படையில் எண்.8, ஏர்மென் தேர்வுமையம், விமானப்படை தளம், கிழக்கு தாம்பரம் என்ற முகவரியில் ஆள்சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

இம்முகாமில் Group-X (ஆசிரியர்) இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக சேர விரும்பும் நபர்கள் 152.5 செ.மீ உயரமும், 01-08-1991-க்குப்பின் 31-05-1996-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01-08-1988-க்குப்பின் 31-05-1996-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஆட்டோ மொபைல் டெக்னீசியன் பணிக்கு 65 செ.மீ. உயரமும், கிரவுண்ட் டெஸ்ட் இன்ஸ்ட்ரக்டர் (GTI) பணிக்கு 167 செ.மீ-உயரமும், IAF போலீஸ் பணியில் சேர 175 செ.மீ உயரமும் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியில் சேர விரும்பும் நபர;கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவராகவும், 01-02-1996க்குப்பின் 31-05-1996-க்குள் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்

Group-X ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு 20-09-2015 அன்றும், Group-Y-க்கான எழுத்துத் தேர்வு 22-09-2015 அன்றும் மேற்கண்ட முகவரியில் நடைபெறும். இந்த நேரடித் தேர்வு காலை 07.00 மணிமுதல் தொடங்கும். காலை 10.00 மணி வரை வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் உடல் தகுதித்தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு முறையே 21-09-2015 மற்றும் 23-09-2015 அன்றும் நடைபெறும்.

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு சென்னை தாம்பரத்தில் உள்ள கமாண்டிங் ஆபீசர், 8, ஏர்மென் டிரைனிங் சென்டரின் தொலைபேசி எண்.044-22390561 மற்றும் 044-22396565 Extension 7833 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!